சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சி சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 9 மணிக்கு சொப்பன சுந்தரி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்கள் மிகவும் ஆபசமாக உடை அணிந்து வருகிறார்கள். இது பார்போருக்கு முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  விஜய் படத்தில் வரலட்சுமிக்கு என்ன கேரக்டர்?

இந்நிலையில், குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபசமாக இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என அனைத்திந்திய சேவைகளுக்கான இயக்க செயலாளர் கன்யாபாபு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.