மீ டூ விவகாரம் இந்தியாவில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது. இந்நிலையில், பெங்களுருவை சேர்ந்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ‘நிபுணன்’ படத்தில் நடிக்கும்போது, அர்ஜுன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக பாலியல் புகார் தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகர் அர்ஜுன் தனுத முகநுால் பக்கத்தில், “நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. ஸ்ருதி ஹரிஹரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள்” என பதிவிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து அர்ஜுன், தான் திரையுலகில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், புகார் அளித்த ஸ்ருதி ஹரிஹரனுக்கு எதிராக பெங்களுர் நகர் சிவில் நீதிமன்றத்தில் ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்திருந்தார்.

இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன், நிபுணன் படத்தில் நடித்தபோது அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெங்களுரு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில், அர்ஜுன் மீது 4 பிரிவுகளில்(354ஏ, 509, 506, 354) காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.