இயக்குனர் பாரதிராஜா சர்ச்சையில் சிக்காத பிரச்சினைகளே இல்லை.

இளையராஜாவும் இவரும் ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்கு ஏதாவது சின்ன மனஸ்தாபங்கள் அவர்களுக்குள் ஏற்படும்போதும் இளையராஜா ரசிகர்களால் மிகுந்த வசைபாடுதலுக்கு உள்ளாவார்.

இளையராஜாவின் ரசிகர்கள் பலருக்கு பாரதிராஜாவுக்கு இசைஞானி எத்தனையோ அருமையான பாடல்கள்,பின்னணி இசை என அவரின் படத்தின் வெற்றிக்கு பாதி காரணமாய் இருந்தபோதிலும் இளையராஜாவை தொடர்ந்து பல வருடங்களாக தனது படங்களில் புறக்கணித்து வந்ததும் ஒரு கோபம்.

இளையராஜா ரசிகர்கள் பாரதிராஜாவின் மீது மிகுந்த கோபம் அடைந்திருந்தனர்.

சில நாட்கள் முன் கூட பிராமணரையும் இளையராஜாவையும் இணைத்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இதுவும் கோபத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.

ரஜினி,விஜயகாந்த் என இதுவரை பாரதிராஜா விமர்சிக்காதவர்கள் வெகு குறைவு. சில மாதங்களாக பாரதிராஜா தமிழகத்தில் மக்களுக்கு ஆதரவான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இது போல போராட்டங்களில் கருத்து கூறுபவர்களில் இரு பிரிவினர் இருக்கிறார்கள் ஏன் போராட்டம் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்ற ரஜினியின் பாணியில் பலரும் சீமான், வேல்முருகன் பாணியில் பலரும் இரு வேறு பிரிவுகளாக பல விஷயங்களில் சமூக வலைதளங்களில் சண்டைபோட்டு வருகின்றனர்.

சேலம் எட்டு வழிச்சாலை, ஐபிஎல், தூத்துக்குடி பிரச்சினை போன்றவற்றுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பாரதிராஜாவை எதிர் தரப்பினர் மிக மோசமான வார்த்தைகளால் வசைபாடுகின்றனர்.

முதலில் மது போதையில் காரோட்டி சென்ற மகனை திருத்துங்கள் அப்புறம் நாட்டை திருத்துங்கள் என்ற ரீதியில் மீம்ஸ் க்ரியேட் செய்து வெளியிட்டு வருகின்றனர்.