இயக்குனர் பாரதிராஜா ஒரு காலத்தில் புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் ஒரு கட்டத்தில் காலமாற்றத்தில் அவரது சில படங்கள் போதிய வெற்றியை அடைய தவறின இருந்தாலும் இன்னும் மனம் சோர்ந்துவிடவில்லை.

அவ்வப்போது போராட்டம், ஆர்ப்பாட்டம் என கலந்துகொண்டாலும் தான் சுவாசிக்கும் சினிமாவை விடவில்லை.

இப்போது ஓம் என்ற பெயரில் படம் எடுத்து வருகிறார் இப்பெயரில் சில வருடம் முன்பு ராஜசேகர் அவர்கள் நடித்து ஒருபடம் இப்பெயரில் வந்தது இருப்பினும் அது கன்னட டப்பிங் படம்.

வாழ்க்கையில் அனைத்தையும் கடந்த முதியவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் நடக்கும் போராட்டங்களே ஓம் படத்தின் கதை என கூறப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை மனோஜ் கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தனது குருநாதரின் மேஜிக் தொடரவேண்டும் என இப்போஸ்டரை தனது டுவிட்டரில் வெளியிட்டு நடிகை ராதிகா வாழ்த்து தெரிவித்துள்ளார்.