இன்று நான்கு படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அரவிந்த்சாமி, அமலாபால் நடிப்பில் உருவான பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படமானது கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்துறையின் போராட்டத்திற்கு பிறகு புதிய படங்கள் ஒவ்வொன்றாக திரைக்கு வர தொடங்கியுள்ளது. முதலில் மெர்குரி படம் மட்டும் வெளியாகியது. பின் கடந்த வாரம் காத்திருப்போர் பட்டியல், இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படங்கள் வெளிவந்தன. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த வாரம் தான் நான்கு படங்கள் வெளியாக இருப்பதாக தகவல் வந்தது. இந்த வாரம் விஷாலின் இரும்புத்திரை, அருள்நிதி நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள், கீா்த்திசுரேஷ் நடிப்பில் நடிகையர் திலகம், அரவிந்த்சாமி அமலாபால் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய நான்கு படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்றது. பின் தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு, டிக்கெட் முன்பதிவும் தொடங்கப்பட்ட நிலையில் படத்தினை திடீரென தள்ளிவைத்துள்ளது படக்குழு. ஏற்கனவே நான்கு முறை தள்ளிவைக்கப்பட்டு இருந்த இந்த படமானது டிக்கெட் முன்பதிவு கூட தொடங்கிய நிலையில் வெளியாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஏன் திடீரென படத்தை தள்ளிவைத்தற்கான காரணத்தை கூறவில்லை தயாரிப்பு நிர்வாகம். ஏற்கனவே நேற்று சென்னையில் உள்ள பிரிவியூ தியேட்டரில் பத்திரிக்கையாளர் காட்சி திரையிடப்பட்ட நிலையில் ஏன் இன்று படம் வெளியாகவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடைசி நேரத்தில் படம் வெளியாக வில்லை என்ற அறிவிப்பை அறிந்த அரவிந்தசாமியும் மனக்குமறலை கொட்டியுள்ளார். இனிமேல் படத்தை பற்றி அறிவிப்பை தான் தெரிவிக்க போவதில்லை என்றும், எந்தவொரு புரோமோஷனும் செய்ய போவதில்லையும் கூறி அதிருப்தி அடைந்துள்ளார்.