இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்தசாமி நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் ஏபர்ல் 27ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் “திரைப்படம் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஏப்ரல் 27 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகிறது. இதனால் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட “பாஸ்கர் ஒரு ராஸ்கல் ” திரைப்படம் முக்கியமான நகரங்களில் திரையரங்குகளின் பற்றாக்குறையின் காரணமாகவும் , எல்லா பகுதிகளிலும் மக்கள் அனைவரும் பார்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இப்படத்தினை மே மாதம் 11 ஆம் தேதியன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது

இதையும் படிங்க பாஸ்-  ஷங்கரின் 2.0 ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு - காரணம் என்ன?

இந்த படத்தில் அரவிந்த்சாமி, அமலாபால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார். அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.