பிக் பாஸ் 2வில் வீட்டின் தலைவர் தேர்ந்தெடுக்கும் படலம் நடைபெற்றது. இதில் தலைவியாக ஜனனி ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவியான பின் குக்கிங் டீம், கிளீனிங் டீம், வாஷிங் டீம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் சென்ட்ராயன், டேனி, யாஷிகாவை பாத்ரூம் கழுவிதற்கு தேர்ந்தெடுத்துள்ளார் ஜனனி ஐயர்.

janani aiyar

வழக்கம் போல பிக் பாஸ் வீட்டின் தலைவர் பொறுப்பு யாருக்கு என்ற போட்டி அரங்கேறியது. அதற்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. பெட் ரூம்மிற்குள் 3 என்வெலப்கள் ஒளித்து வைக்கப்ட்டிருக்கும். அதை கண்டுபிடிப்பவர்கள் பிக் பாஸ் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என பிக் பாஸ் அறிவித்தார். முதலில் போட்டியாளர்கள் தங்களின் படுக்கையை சோதனை செய்தனர். பின் அடுத்தவர்களின் படுக்கையை சோதனை செய்ய வேண்டும். இதில் தான் மற்றவர்களுக்கு சோதனை ஏற்பட்டது. ஏனெனில் மும்தாஜ் இந்த நிலையில் கடுமையான கோபமானார். பெண்கள் ரூம்மிற்கு வந்த சென்ட்ராயனை பார்த்து தான் கோபமாக, பாய்ஸ் யாரும் பெண்கள் துணியில் கை வைக்க வேண்டாம் என சத்தம் போட்டார்.

sendrayan

என்ன நடந்தது என்று தெரியல பிக் பாஸ் நாமினேசன் லிஸ்டில் மும்தாஜ் பெயரை பிற போட்டியாளர்கள் தேர்வு செய்திருந்தனர். இதனால் ஜனனி, மகத், மும்தாஜ் ஆகியோரில் ஜனனி ஐயர் அதிக வாக்குகள் பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இனிமேல் அவர் தான் யார் யார் என்னனென் வேலைகள் செய்ய வேண்டும் என முடிவு செய்வார் என பிக் பாஸ் அறிவித்தார்.

கிளீனிங் டீம், குக்கிங் டீம், வாஷிங் டீம் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தலைவர் ஜனனி ஐயருக்கு சென்ற காரணத்தால் அவர் பாத்ரூம் சுத்தம் செய்யும் பணியில் சென்ட்ராயன், டேனியல் தேர்ந்தெடுத்தார். அவர்கள் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். பின் அணியில் ஒரு பெண் இருக்க வேண்டும் என்பதால் யாஷிகாவை பாத்ரூம் அணிக்கு பரிந்துரை செய்தார்.

ஜனனி ஐயர் பாத்ரூம் டீம்மிற்கு டேனியல், சென்ட்ராயன், யாஷிகா உள்ளிட்டவர்களை தேர்ந்தெடுத்து பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. ஏதோ ஒரு காரணத்தை வைத்து கொண்டு தான் இப்படி செய்திருக்கிறார் என்று பார்வையார்கள் மத்தியில் ஒரு பேச்சு அடிபடுகிறது.