காயமடைந்த இந்திய முன்னனி வீரர் ஷிகார் தவானுக்குப் பதிலாக மாற்று வீரராக ரிஷப் பண்ட் அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் ஷிகார் தவான் பேட் செய்துகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவரது கைவிரலில் காயம் பட்டது. அதில் அவர் விரலில் மயிரிழை அளவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்துள்ளனர். இதனால் ஷிகார் தவான் உலகக்கோப்பையில் இருந்து விலக நேரிடும் என பிசிசிஐ வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. ஆனால் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதையும் படிங்க பாஸ்-  சென்னை vs டெல்லி – இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார் ?

இந்நிலையில் ஷிகார் தவானுக்கு மாற்று வீரராக ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு அழைத்துள்ளது பிசிசிஐ. அவர் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் பாகிஸ்தான் போட்டியின் போது இருப்பார். ஆனால் அவர் இந்திய அணியினரோடு தங்கவோ அவர்களோடு பஸ்ஸில் பயணம் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார். வலைப்பந்து வீச்சாளர்களுடன் தங்க வைக்கப்படுவார்.

இதையும் படிங்க பாஸ்-  2 கத்திகளால் 59 முறை மனைவியை குத்திய கொடூர கணவன்...

ஷிகார் தவானின் விலகல் குறித்து பிசிசிஐ முடிவு எடுத்த பின்னரே ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிப்பார் எனத் தெரிகிறது.