உலகக்கோப்பைத் தோல்வியை அடுத்து இந்திய அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோரை அணியில் இருந்து நீக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

உலகக்கோப்பை முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஒரே ஒரு மோசமான போட்டியால் அரையிறுதியில் இருந்து வெளியேறியது. இந்த தொடர் முழுவதும் ரோஹித், ராகுல் மற்றும் கோஹ்லி ஆகிய 3 பேரை மட்டுமே நம்பியிருந்ததாலும் அவர்கள் ஒரு போட்டியில் சரியாக விளையாடததால் மற்றவர்கள் சரியாக விளையாடாமல் தோல்வி அடைந்து உலககோப்பையில் இருந்து வெளியேறினர்.

இந்த தொடர் முழுவதுமே தொடர்ந்து சொதப்பி வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் கேதார் ஜாதவ்வை தூக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக அந்த இடத்தை இளம் வீரர்களைக் கொண்டு நிரப்ப பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. இருவருக்கும் 34 வயது ஆகிவிட்டதால் இந்த முடிவு எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.