பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா தான் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் போது பட வாய்ப்புக்காக படுக்கை அறை கலாச்சாரம் இருந்ததாக மனம் திறந்துள்ளார்.

நடிகை மீனா 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித் என பல முன்னணி பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள இவர் 150 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை மீனா தனது சினிமா பயணம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தபோது, தன்னுடைய காலத்திலும் பட வாய்ப்புக்கு படுக்கை அறை கலாச்சாரம் இருந்தது என தெரிவித்தார். மேலும் எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பிரச்சனை உள்ளது. நான் எதிர் கொள்ளவில்லை என்றாலும், என் காலத்திலும் இது போன்ற பிரச்சனை இருந்தது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், வக்கிர புத்தி கொண்ட ஆண்கள் திருந்த வேண்டும். அவர்கள் ஒரு பெண்ணிடம் டீல் பேசுவதற்கு முன்பு, தங்களுக்கும் மனைவி, மகள் இருக்கின்றனர் என்பதை உணர வேண்டும். திறமைக்கான வாய்ப்பை வேறு எந்த சமரசமும் இல்லாமல், பெண்கள் போராடிப் பெற வேண்டும் என்றார்.