தற்போது கமல்ஹாசன் அரசியலில் இறக்க போகிறார் என்ற செய்தி அறிவித்துள்ள நிலையில், வடசென்னைக்கு ஆபத்து வந்துள்ளதாகவும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில்,

`தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. கோசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்ரைவிட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம். (Vallur Thermal Plant) வல்லூர் மின் நிலையமும் வடசென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கோசஸ்தலையாற்றில் கொட்டுகின்றன.

      இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல வருடங்களாக போராடியும் அரசு பாராமுகமாய் உள்ளது. மீனவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெலுப்ப முற்பட்டதும் செவிடர் காதில் உதிய சங்குதான். பற்றாக்குறைக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும் பாரத் பெட்ரோலியமும் தங்கள் எண்ணெய் முனையங்களை நட்டாற்றில் கட்டியிருக்கின்றன. காமராஜர் துறைமுகத்தை விரிவுபடுத்துகிறோம் என்ற போர்வையில் கோசஸ்தலையின் கழிமுகத்தின் 1000 ஏக்கர் நிலத்தை சுருட்டும் வேலையும் நடப்பதாகக் கேள்விபடுகிறேன்.நில வியாபாரிகளுக்குக் கொடுக்கும் முன்னுரிமையையும், உதவியையும் ஏழை மக்களுக்கு கொடுக்காத எந்த அரசும் நல்லவற்றைப் புறக்கணிக்கும் உதவாக்கரைகள் தான். வழக்கமாக வரும் மழை போன வருடம் போல் பெய்தாலே வடசென்னைக்கு ஆபத்து வந்துவிடும்

சென்னை – காட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், சிவன்படைவீதி குப்பத்து மீனவ நண்பர்களின் குரலை ஊடகங்கள் தான் உயர்த்த வேண்டும்’. எனவே தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காப்பதே நல்லது என்று கூறியிருக்கிறார்.