Connect with us

செய்திகள்

விஜயகாந்த் ஆதரவு கிடைச்சாச்சு.. அடுத்து ரஜினி,கமல்.. பாக்கியராஜ் அதிரடி

Published

on

Bhagyaraj team met vijayakanth – நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்கியராஜுக்கும் அவரது அணிக்கும் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதால் வருகிற ஜூன் 23ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த முறையும் தலைவர் பதவிக்கு நாசரும், துணை தலைவர் பதவிக்கு கருணாஸும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், கார்த்தி பொருளாளர் பதவிக்கும் போட்டியிடவுள்ளனர்.

இவர்களின் எதிரணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுகிறார். அவரது அணியில் விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். அதேபோல், கார்த்தியை எதிர்த்து பிரசாந்த் போட்டியிடுகிறார். இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அணி இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள் என விஜயகாந்த் கூறியதாகவும், அது உற்சாகத்தை கொடுத்துள்ளதாகவும் பாக்யராஜ் தெரிவித்தார். மேலும், விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது கடனை அடைத்தார். எனவே, செண்டிமெண்டாக அவரை சந்தித்தோம். ரஜினி, கமல் இருவரையுமே சந்தித்து ஆதரவு கேட்போம் என அவர் தெரிவித்தார்.

Trending