ஹர ஹர மஹாதேவகி படத்தை எடுத்த அந்த டீம் மீண்டும் இணைந்து கொடுத்துள்ள படம் தான் இரட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியாகியது. இளைஞர் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கு எதிராக இயக்குனர் பாரதிராஜா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசமான காட்சிகள் உள்ளிட்டவை நேரடியாகவே இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. இலை மறை காயாக சொல்லப்பட வேண்டியவற்றை நேரடியாக கொடுத்துள்ளதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த மாதிரி தரம் இல்லாத படங்களை வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என்றும், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் இந்த மாதிரி படங்கள் வெளியாவதற்கு காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது இயக்குநர் பாரதிராஜா அரசியல் குறித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அரசியலில் ரஜினியையும் கடுமையாக வாடி வருகிறார். இப்படி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வரும் பாரதிராஜா தற்போது சரியாக அறிக்கையை வெளியிட்டு உள்ளதாக சமூக வலைத்தளஙகளில் கருத்து தெரிவித்து வருகின்றனா் நெட்டிசன்கள்.

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கு. சினிமா ஒரு பொழுது போக்கு. அதில் இப்படி தரமில்லாத படங்களை வெளியிட்டு தரமான படங்கள் மேலே வரமுடியாமல் போய்விடுகிறது. தமிழ் கலாச்சாரம் பண்பாடு என்ன என்பதை உணர்ந்து படம் கொடுக்க வேண்டும். சென்சார் போர்டு இந்த மாதிரி படங்களுக்கு கத்திரி கோல் போட்டு கட் செய்யாமல் அனுமதிக்க கூடாது என்று கூறினார்.