நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் தனது சிஷ்யரான பாக்யராஜ் அணிக்கு இயக்குனர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் விஷாலுக்குப் போட்டியாக பாரதிராஜா தலைமையிலான அணியை நிறுத்த திரையுலகில் மும்முரமாக வேலைகள் நடந்து வந்தன. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று நடைபெற்ற மிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் இயக்குனராக பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க பாஸ்-  சோறு சாப்பிடுங்க விஷால்...அக்‌ஷய் குமார் அட்வைஸ்

இதையடுத்து முழுத் திரையுலகத்தையும் பாரதிராஜா கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வேலைகள் நடைபெறுவதாகத் தெரிகிறது. இயக்குனர் சங்கத்துக்குத் தலைவரான பின்பு முதல் வேலையாக பாரதிராஜா நடிகர் சங்கத் தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகிறது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா ‘ நடிகர் சங்கத் தேர்தலில் எனது சிஷ்யர் பாக்யராஜ் அணி வெல்ல வேண்டும் என நினைக்கிறேன். நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு வருவதற்கான முழுத்தகுதியும் உள்ளவர் பாக்யராஜ்’ எனக் கூறியுள்ளார். ஏற்கனவே விஷால் தலைமையிலான அணி மீது துணைநடிகர்கள், நாடக நடிகர்கள் உள்பட எல்லோரும் அதிருப்தியில் உள்ள நிலையில் இப்போது பாரதிராஜாவும் அவருக்கு எதிராகக் களமிறங்கியுள்ள நிலையில் விஷால் அணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.