சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த நாள் முதல் திரையுலகில் வேலையில்லாமல் ஓரங்கட்டப்பட்ட ஒருசில இயக்குனர்கள் அவரை அவ்வப்போது கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த பட்டியலில் ஒருவர் பாரதிராஜா. ரஜினியை விமர்சனம் செய்வதால் இலவச விளம்பரம் தேடி கொண்டு வரும் அவர் நேற்று மீண்டும் ரஜினியை தரக்குறைவாக விமர்சனம் செய்து பொதுமக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளார்.

நேற்று பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியதாவது:‘நான் ஒரு தமிழன் என ரஜினி கூறுவது அவரது தாய் மொழிக்கு செய்யும் துரோகம். தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? முதலில் எதிரியை துரத்துவோம்; பின்னர் அண்ணன், தம்பி பிரச்னைகளை பார்த்துக்கொள்வோம்’ என்று கூறியுள்ளார்

பாரதிராஜாவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி நடுநிலையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்