தமிழகத்தில் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 10ம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெற்ற மைதானத்தை சுற்றிலும் போராட்டங்கள் கடுமையாக நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத வகையில் ஐபிஎல் போட்டிகள் தமிழகத்தில் நடத்த கூடாது என போராட்டத்தில் சீமான், கவிஞா் வைரமுத்து, பாரதிராஜா, வெற்றிமாறன், களஞ்சியம், இயக்குநா் ராம் உள்பட பலரும் கலந்து கொண்டனா். நாம் தமிழா் கட்சியை சோ்ந்த பலரும் கைது செய்யப்பட்டனா். அப்போது போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சில காவலர்கள் மீது போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த போராட்டக்களம் கலவர களமாக மாறியது.

இந்நிலையில் நடிகா் ரஜினி, போராட்டக்காரர்கள் காவல்துறை மீது தாக்குதல் நடத்தியது மாபெரும் குற்றம் எனவும், வன்முறையின் உச்சகட்டமே என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இயக்குநா் பாரதிராஜா ரஜினியின் கருத்து பற்றி கடுமையாக விமா்சித்துள்ளார். அவா் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும், கர்நாடகாவில் காவலர்கள் தமிழா்களை துரத்தித் துரத்தி அடித்த போதும், நியூட்ரினோ எதிராக போராட்டங்கள் நடந்த போதும், தமிழா்களுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்காதது போது இப்போது சீருடையில் இருக்கும் காவலா்களும் எங்கள் தமிழன் தான். எங்களுக்குள் சண்டை மூட்ட வேண்டாம். இன்று தமிழ் நாட்டிலேயே இருந்து கொண்டு தமிழனிடம் உறிஞ்சிய ரத்தத்தில், ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு எங்களையே வன்முறையாளர்கள் என்று குற்றம் சுமத்துகிறீர்கள். எங்கள் தமிழ் மக்களால் நீங்கள் ஒரங்கட்டப்படுவீா்கள். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதையும் நீங்கள் உணா்வீா்கள் என்று கடுமையாக தெரிவித்தார்.