Director Bharathiraja – தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமா இயக்குனர் சங்கத்தின் தலைவராகா விக்ரமன் தலைவராகவும், ஆர்.கே.செல்வமணி பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  மகன் பிரச்சினையில் நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்படும் பாரதிராஜா

இந்நிலையில், இந்த சங்கத்தின் பொதுக்கூ கூட்டம் இன்று சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் நடைபெற்றது. அப்போது, நிர்வாகத்தின் பணிக்காலம் முடிவடைவதால் அடுத்த தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

விக்ரம் தொடர்ந்து 5 வருடங்களாக தலைவர் பதவியில் இருந்துவிட்டதால் மீண்டும் போட்டியிட விருப்பமில்லை என தெரிவித்துவிட்டார். எனவே, சங்கத்தின் தலைவராக மூத்த இயக்குனர் பாரதிராஜா ஒரு மனதாக அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.