பாவனா கடத்தல் வழக்கில் தொடர்புடைய அந்த பெண் யார்?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை பாவனா மர்ம நபர்களால் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆனாலும் இவர்களுக்கு பின் உள்ள முக்கிய புள்ளி யார் என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பல்சர் சுனில் என்பவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தன. பாவனா காரில் கடத்தப்பட்டபோது பல்சர் சுனில் செல்போனுக்கு ஒரு பெண் தொடர்புகொண்டு முக்கிய தகவல்களை கூறியதாக தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.