விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சின்னதம்பி’ சீரியலில் நடித்து வரும் நடிகை பவானி ரெட்டி 2வது திருமணம் செய்ய இருக்கிறார்.

தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தவர் பவானி ரெட்டி. அதன்பின் அங்கு சரியான வாய்ப்பு இல்லாத காரணத்தால் தமிழ் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சின்னதம்பி’ சீரியலில் இவர் நடித்து வருகிறார்.

இவர் 2 வருடங்களுக்கு முன்பு பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்களின் திருமண வாழ்க்கை 8 மாதம் மட்டுமே நீடித்த நிலையில், பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த பவானி தொடர்களில் நடிக்காமல் விலகி இருந்தார்.

அதன்பின்புதான், சின்னதம்பி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். தற்போது ஆனந்த என்பவரை 2வது திருமணம் செய்யவும் அவர் முடிவெடுத்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பவானி “2வது திருமணம் செய்ய எனக்கு விருப்பமே இல்லை. ஆனால், என் திருமணமே என் பெற்றோருக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என்பதால் ஆனந்தை திருமணம் செய்ய முடிவெடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.

விரைவில் அவர்களின் திருமணம் நடக்கவுள்ளது.