அய்யோ…விஜய் நாயகிக்கு இந்த நிலைமையா?

விஜய் நடித்த பத்ரி படம் மூலம் அறிமுகம் ஆனவர் பூமிகா. தொடர்ந்து ரோஜா கூட்டம், ஜில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில்  நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.இவர் பிரபு தேவாவுடன் நடித்த களவாடிய பொழுதுகள் இன்னும் வெளியாகவில்லை.

பூமிகா திரையுலகில் நல்ல நிலையில் இருக்கும்போதே யோகா நிபுணர் பரத் தாகூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகன் உண்டு.

இந்த நிலையில் இவர் அக்கா ,அண்ணி வேடங்கள் இருந்தாலும் நடிக்க தயார் என்று தனது தோழிகளிடம் கூறி வருகிறாராம். பூமிகாவின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை என்றும், கணவரை பிரிந்துவிட்டார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் அவர் கடும் பணத் தட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதனாலயே எந்த வேடமானாலும் நடிக்க தயார் என்று இறங்கி வருவதாகவும் திரையுலகில் பேசப்படுகிறது.

மீண்டும் பூமிகாவை வெள்ளி திரையில் காணலாம் ரசிகர்களே! ஆனால் கதாநாயகியாக அல்ல!! அம்மா,அண்ணி வேடங்களில்தான்.