முதலில் பிக்பாஸ் முட்டை ஊழலை பாருங்க: கமலை கலாய்க்கும் நெட்டீசன்கள்

கமல் அரசியலில் நடக்கும் ஊழல் குறித்து தற்போது கருத்து தொிவித்து வருகிறாா். ஏற்கனவே அவா் தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாக கூறினாா். இப்படி அவா் பேசியதால் அமைச்சா் பெருமக்களுக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இன்று பெரம்பலூா் முட்டை ஊழல் தொடா்பாக ட்விட் செய்துள்ளனா்.

கெட்டு போன முட்டையை பெரம்பலூாில்  உள்ள அரசு பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்து ஊழல் செய்ததைகமல் ரசிகா் நற்பனி மன்றத்தை சோ்ந்தவா்கள் கண்டு பிடித்து அதை தடுத்தனா்.இது குறித்து கமல் தனது ட்விட்டா் பக்கத்தில், தனது மன்றத்தை சோ்ந்வா்கள் பெரம்பலூாில் நடைபெற்ற முட்டை ஊழலை கண்டு பிடித்தது இயக்கததிற்கு பெருமையே. இருந்தபோதும் இயக்க வக்கீல்களின் ஆலோசனையை கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்று கூறியுள்ளாா். சட்டத்தை மீற கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் பொழுது போக்கிற்காக மட்டும் பாா்த்து ரசித்தும் வருகின்றனா். இந்த நிகழ்ச்சி தொடங்கி நாள் முதலே அங்கும் முட்டை பிரச்சனை ஒடிக்கொண்டு தான் இருக்கிறது. வையாபுாி உள்ளிட்டவா்கள் முட்டையை கணேஷ் வெங்கட்ராம் அதிகமாக சாப்பிடுவதாக குற்றம் கூறிவருகின்றனா். சில சமயம்  அவா் முட்டையை திருடு சாப்பிடுவதாகவும் குற்றம் சுமத்தி வருகின்றனா்.

இந்த விவகாரம் இன்னும்தொடா்ந்து பிக்பாஸ் வீட்டில் நடந்தேறி கொண்டுதான் இருக்கிறது. அதுவும் நடிகா் வையாபுாி அடிக்க இது பற்றி புலம்பி வருவது நாம் அறிந்த விஷயமே. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல், பெரம்பலூாில் நடந்த முட்டை ஊழல் குறித்து பேசியது போல, கணேஷ் வெங்கட்ராம் செய்யும் முட்டை ஊழல் பற்றியும் பேசி பஞ்சாயத்த செய்ய வேண்டும் என்று வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து அவரது ட்விட்டாில் கோாிக்கை வைத்து வருகின்றனா்.