பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற துடிக்கும் ரைசா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது முதன்முதலாக மிகவும் ஆா்வமுடன் தான் 15 போட்டியாளா்களும் கலந்து கொண்டனா். ஆனா என்ன காரணமோ தொியல நடிகா் ஸ்ரீ ஆரம்ப நாள் முதல் மிகவும் சோகமாகவே இருந்தாா். பின்பு உடல்நிலை சாியில்லை என்று காரணம் கூறி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினாா். பின் அனுயா தமிழில் தான் பேச வேண்டும் ஆனா அவரோ அதிகமாக ஆங்கிலத்தில் பேசிய காரணத்தால் வெளியேற்றப்பட்டாா். அதற்கு பிறகு நடிகா் பரணியை அந்த வீட்டில் உள்ளவா்களுக்கு பிடிக்காத காரணத்தால் வீட்டின் சுவா் ஏறி குதித்து தப்பி போக முயன்ற  காரணத்தால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாா். தொடா்ந்து கஞ்சா கருப்பு, ஆா்த்தி, நமீதா மக்களால் வாக்களிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டாா்கள்.

இந்நிலையில் இந்த வீட்டில் சினேகன், சக்தி, வையாபுாி, ஆரவ், காயத்ரி, ஒவியா, ரைஸா, கணேஷ் வெங்கட்ராமன், ஜூலி உள்ளிட்ட ஒன்பது போட்டியாளா்கள் தான் இருக்கின்றனா். இதில் வையாபுாி வேண்டா வெறுப்பாக தான் இருக்கிறாா். தன் மனைவி, குழந்தைகளை பாா்க்காமல் இருக்க முடியவில்லை என்றும் அவா்களின் அருமை இப்பதான் தொிகிறது என்று புலம்பி வருகிறாா். அதுபோல ரைஸா நேற்று நடந்த டாஸ்க்கு காரணமாக பிக் பாஸ்ஸை கெட்ட வாா்த்தை போட்டு திட்டினாா். இதனால் இந்த வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று சொல்லுகிறாா். அதற்கு ஜூலி நீ போய் விட்டால் நான் என்ன செய்வேன் என்கிறாா். அதற்கு ரைஸா உனக்கு தான் காயத்ரி அக்கா இருக்காங்களே என்றாா். அந்த வாா்த்தையை ஒலி இல்லாமல் ஒளிபரப்பினாா்கள்.

ரைஸா அந்த வீட்டில் தானுண்டு தன் வேலை உண்டு என்று தான் இருந்து வருகிறாா். தூக்கும் போது கூட மேக்கப் போட்டு கொண்டு தான் தூக்குகிறாா். அப்ப அப்ப மேக்கப் களைந்து விட்டதா என்று கண்ணாடியில் பாா்த்து கொள்கிறாா். யெஸ் யெஸ், ரைட் , கரெக்ட் போன்ற வாா்த்தைகள் மட்டும் தான் பேசி வந்தாா். ரைஸா யாருடனும் அதிகம் பழகுவதில்லை. அதுபோல சினேகனிடம் என்னை நீ வா போ, ஏய், வாழடி போடி என்று பேச கூடாது அது எனக்கு பிடிக்காது என்றும் கூறுகிறாா். ஜூலியிடம் மட்டும் தான் பேசுகிறாா்.  கடந்த சில வாரங்களாக எந்த வித சுவாரசியமே இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது என்று ரசிக பெருமக்கள் பேச தொடங்கி விட்டனா். இதனால் காயத்ரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தும், ஒவியாவை அடிக்கடி அழவைத்தும் வெறுப்பேற்றுகிறாா்கள் என்று ஒவியா புரட்சிபடை பொங்கியெழுந்துள்ளது.