பிக்பாஸ் வீட்டில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா

03:14 மணி

 

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். ஆரம்பத்தில் மந்தமாக துவங்கிய நிகழ்ச்சி திடீரென பரபரப்பானது. தொலைக்காட்சியின் டீ.ஆர்.பியும் கண்ணா பிண்ணாவென எகிறியது. காரணம் ஓவியா என்ற ஒற்றை பெண்தான். பின்னர் ஆரவுடன் ஏற்பட்ட காதல், மற்ற நபர்களால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். ஒவியா வெளியேற்றத்துக்கு பின் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்தது. இதனை உணர்த்த தொலைக்காட்சி தரப்பு  ஓவியாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் இல்லத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா வர உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன. வேலைக்காரன் பட ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சிக்காக இந்த இருவரையும் ஒருநாள் மட்டும் பிக்பாஸ் இல்லத்தில் தங்க வைத்தால் நிகழ்ச்சியும் சூடு பிடிக்கும், படத்திற்கும் ஒரு விளம்பரம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் விஜய் டீவி தயாராகி வருகிறதாம்.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com