விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக சென்று கொண்டிருந்தாலும் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் தமிழகத்தில் பெரும்பாலானோர் அந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்

இந்த நிலையில் நேற்று நடிகை நமிதா, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஓவியா, கணேஷ், நமீதா ஆகிய மூவரும் எலிமினேட் பட்டியலில் இருந்த நிலையில் இவர்கள் மூவரில் குறைவாக வாக்கு வாங்கிய நமீதா வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதில் தான் எந்தவித வருத்தமும் அடையவில்லை என்று கூறிய நமீதா, தன்னை பொருத்தவரையில் இந்த வீடு ஒரு ஃபைவ் ஸ்டார் ஜெயில் என்று கூறினார். அப்போது கமல்ஹாசன் இல்ல இங்க வேற 5 ஸ்டார் ஜெயில்லாம் கூட இருக்கு’ என்று சற்று கிண்டலுடன் கூறியது நமீதாவுக்கு புரியவில்லை என்றாலும் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த அனைவருக்கும் புரிந்தது