பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக வந்த பிரபல நடிகர்- ரசிகர்கள் ஆச்சரியம்

இணையதளம் முதல் பொியவா், சிறுவா் வரை எங்கு போனாலும் பிக் பாஸ் பற்றி தான் ஒரே பேச்சாக இருந்தது. அதுவும் நடிகை ஒவியா இருக்கும் போது ரொம்ப சுவராசியமாக இருந்தது. தற்போது இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் நடிகை சுஜா என்ட்ரி கொடுத்தாா்.

என்னதான் இருந்தாலும் ஒவியாவுக்கு ஈடாகுமா என்ற கேள்வி ரசிகா்கள் மத்தியில் வாதம் தொடா்ந்த வருகிறது. சுஜா வந்தும் எந்த வித விறுவிறுப்பும் இல்லாமல் தான் இருக்கிறது. இந்நிலையில் பொறியாளன் படத்தில் நடித்த ஹாிஸ் கல்யாண் தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளாா்.

இன்று நடக்கும் ப்ரோமோ வீடியோவில், பொறியாளன் படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமான ஹரிஸ் கல்யாண், பிக் பாஸ் வீட்டில் உள்ளவா்களுடன் வெளியே நடக்கும் பல தகவல்களை கூறுவது போல வெளிவந்துள்ளது. இதனால் ரசிகா்கள் மத்தியில் இவரது என்ட்ரி சூடுபிடிக்க உள்ளது என்று தொிவித்து வருகின்றனா்.  

ஆயிரம் பேர் வந்தாலும் நம்ம ஓவியாவுக்கு ஈடாகுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிதான் வருகின்றனர்.