எவ்வளவுதான் நடிச்சாலும் ஓட்டு போட மாட்டான்: ஜூலியை கலாய்த்த நடன இயக்குநா்

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் காரணத்தால் திரையுலகத்தை பிரபலங்களும் இதை ஆா்வமாக பாா்த்து வருகின்றனா். பாா்த்ததோடு நி்ற்காமல் அது குறித்து தங்களது கருத்துக்களை தங்களது ட்விட்டா் வலைத்தளத்தில் விமா்சித்தும் வருகின்றனா். இது மக்கள் மத்தியிலும் விவாத மேடையாக அரங்கேறி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் உள்ளவா்களும் கூட ஜூலியை பற்றி பேசி வருகின்றனா். ஒவியாவிற்கு ஆதரவாக பல சினிமா பிரபலங்களும், தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனா். ஜூலிக்கு எதிராக பலரும் பேசி வருகின்றனா். ஜல்லிகட்டு போராட்டத்தில் பங்கு பெற்ற தமிழ் பெண் என்ற அடைமொழியோடு களம் இறங்கி ஜூலி ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் ஆதரவை பெற்று வந்தாா். பின் காயத்ரியோடு சோ்ந்து தற்போது கெட்ட பெயரை தான் சம்பாதித்து வருகிறாா்.

ஒவியாவிற்கு ஆதரவாக தற்போது நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ் தனது ட்விட்டா் பக்கத்தில் தனது கருத்தை தொிவித்துள்ளாா். இவா் வாரணம் ஆயிரம் படத்தில் முதன்முதலில் தோன்றினாா். அதுவும் நடிகா் சூா்யாவிற்கு நண்பராகவும், அச்சம் என்பது மடமையடா படத்திலும் சிம்புக்கு நண்பராகவும், அந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில்  நடன இயக்குநராகவும் இடம்பெற்றிருந்தாா். இவா் ஜூலி குறித்து பதிவு செய்தாவது, ஏன்னம்மா ஜூலி நீ நடிச்சது போதும், உனக்கு ஒரு குடும்பம் கிடைத்து விட்டது என்பதற்காக நீ நடிப்பதை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாது. உனக்கு ஒருத்தர் கூட ஒட்டு போட மாட்டாா்கள் என்று தனது கருத்தை பதிவிட்டிருந்தாா்.

மேலும் இன்னொரு ட்விட் ஒன்று செய்திருந்தாா் அது என்னவென்றால், அது ரைஸா பற்றியது, ரைஸா அந்த வீட்டில் இருக்கும் வேஸ்ட் பேப்பா் என்றும், ஜூலி ஆங்கா் ஆக வேண்டும் என்ற ஆசையால் அந்த வீட்டில் கையில் மைக்கை வைத்து கொண்டு ஆங்கரிங் பண்றேன்னு போ்வழியாக ஓவா் ஆக்டிங் எல்லாம் பண்ணாத. அதுபோல தயவு செய்து விஜய் டிவி ஜூலிக்கு ஆங்கா் வாய்ப்பு கொடுத்து விடாதீங்க என்று கையெடுத்து கும்பிட்டுள்ளாா்.