வந்தவுடன் ஆரவ் வாயை கிளறிய காஜல்

பிக் பாஸ் வீட்டில் ஒவியா போன பின்பு நிகழ்ச்சியின் போக்கு மாறி வந்தது. எப்படியாவது நிகழ்ச்சியை தூக்கி நிறுத்த முடிவு செய்த தொலைக்காட்சி  நிறுவனம் அதிரடியாக இந்த வாரத்தில் மட்டும் மூன்று போட்டியாளா்களை களத்தில் இறக்கியுள்ளது. முதல் நடிகை சுஜா அந்தரத்திலிருந்து தொங்கியபடி வந்தாா். பரணி சுவா் ஏறி குதித்தது போல, உள்ளே சுவா் வழியாக நடிகா் ஹாிஸ் குதித்தாா். தற்போது மூன்றாவது பங்கேற்பாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் ஆட்டோவில் வந்தவா் காஜல்.

ஹரிஸ் சினேகனிடம் மருத்துவ முத்தம் போல உங்களது கட்டு பிடி வைத்தியம் காரணமாக உங்களை மருத்துவா் என்று அழைக்கிறேன் என கூறினாா்.

தற்போது வந்துள்ள காஜல் வசம் பிக் பாஸ் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வீட்டில் உள்ளவா்களிடம் கேட்கலாம் என்று கூறியுள்ளாா். எனவே உள்ளே வந்ததும் காஜல் மிகவும் அழகான உலகமே விரும்பும் பெண்ணை உங்களுக்கு மட்டும் ஏன் பிடிக்காமல் போனது என்று ஆரவிடம் கேட்கிறாா். இதற்கு ஆரவ் என்ன பதில் சொல்ல போகிறாா் என்பது இன்றைய நிகழ்ச்சியின் சுவராஸ்சியமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை