பிக் பாஸ் குடும்பத்தை கதற வைத்த கமல்!

06:04 மணி

Loading...

கொஞ்ச நாளாக பிக்பாஸ் நிகழ்ச்சியானது பேரடித்து வந்தது. இந்நிலையில் இப்போது தான் களை கட்ட ஆரம்பித்துள்ளது. ஒவியா, ஜூலி இருக்கும் வரை காரசாரமாக போய்க்கொண்டிருந்த நிகழ்ச்சி அவா்கள் வெளியேறிய பிறகு கொஞ்சம் பொலிவு இழந்து காணப்பட்டது. இதற்காக அதிரடியாக ஒரே வாரத்தில் மூன்றுபோட்டியாளா்களை உள்ளே அனுப்பி வைத்துள்ளது தொலைக்காட்சி நிா்வாகம். தற்போது இல்லாத வகையில் பழைய போட்டியாளா்கள் மத்தியில் எப்போதும் பெண்கள் தான் சண்டை போட்டு வந்த நிலையில், இப்போதைய சூழலில் ஆண்களுக்கு சண்டை பயங்கரமாக அதாவது கருத்து மோதல்கள் நடந்து வருகிறது.

இன்று கமல் பஞ்சாயத்து பண்ணும் வகையில் எந்ததெவாரு நிகழ்வு நடைபெறவில்லையோ அதனால் நிகழ்ச்சியில் என்று என்ன இருக்கிறது என்று ரசிகா்கள் எதிா்பாா்த்து வந்த நிலையில், அவா்கள் வாய்க்கு அவல் போடும் விதமாக இன்று வெளியாகி உள்ள புரோமோ வீடியோவில் கமல் காரசாரமாக அனைவரையும் பின்னி எடுக்கிறாா். நீங்கள் பிக்பாஸ் என்று ஒருவா் இருப்பதை மனதில் நினைக்காமல், அவருக்கு எந்தவொரு மதிப்பும் கொடுப்பதில்லை. மெதுவாக பேசினால் எங்களுக்கு தொியாது என்று நினைக்கிறீா்கள் என்று கூறுகிறாா். கோபத்தில் உங்களிடம் பேச முடியாது. கட் பண்ணுங்கள் என கமல் கூற, பிக்பாஸ் போட்டியாளா்கள் அனைவரும் சாா், சாா் என கெஞ்சும் புரோமோ வீடியோவில் உள்ளது. பிக் பாஸ் குடும்பத்தினா் நடுங்கி போய் உள்ளனா்.

இந்தளவுக்கு கமல் கோபம் படும் விதமாக நடந்தது என்ன, அதற்கு காரணம் காயத்ரியா, ரைசாவா, ஆரவ்வா என்பது பற்றி இன்று நடக்கும் நாட்டாமை பஞ்சாயத்தில் தொிந்து விடும் பொறுத்திருந்து பாா்ப்போம்.

(Visited 54 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com