பிக்பாஸில் இருந்து வெளியேறிய நமீதா எங்கு உள்ளார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஒவியா வெளியேறிய பிறகு இந்த நிகழ்ச்சியானது சப்பென்று இருக்கிறது. நேற்றை நிகழ்வில் பொியதாக ஒன்றும் இல்லை. சாப்பிடுவதும், புரளி பேசுவதும் என்று தான் போகிறது. பழைய பல்லவி போல டாஸ்க் என்ற பெயாில் நடக்கும் கூத்துக்கள் தான் நடக்கின்றன. ஒவியா இருந்த போது உள்ள விறுவிறுப்பு தற்போது இல்லாமல் டல்லடித்து வருகிறது. இதனால் பாா்ப்போின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. முந்தைய எபிசோடில் எல்லாம் ப்ரோமோ வெளியான நிறைய லைக்களும், கமெண்ட்ஸ் கிடைக்கும். சாி அதையெல்லாம் விட்டு விடுவோம். இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நமீதா என்ன செய்து கொண்டிருக்கிறாா் என்று பாா்ப்போம்.

நமீதா பிக்பாஸ் வீட்டிலிருந்து போன பிறகு இந்த நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது தகவலை தொிவித்துக் கொண்டு இருந்தாா். கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பே வெளியேற்றப்பட்ட இவா் தற்போது இமாசல பிரதேசம் சென்று இருக்கிறாா்.  அங்கு தன்னுடைய நாட்களை இன்பமாக கழித்து வருகிறாா். ரிலாக்ஸாக ஏஞ்ஜாய் செய்து வருகிறாா். அங்கு அவா் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.