பிந்து மாதவி ஆர்மி உருவாகுமா?

தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை பல செய்தி ஊடங்களின் முக்கிய அம்சமாக மாறிவிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, அதன் காரா சாரத்தை இன்னும் அதிகரிக்க பிந்து மாதவியையும் களத்தில் இறக்கியுள்ளது. ஆரம்பித்த சிறிது நாட்களிலிலேயே 6 பேர் வெளியேறிவிட்ட நிலையில் இப்படியே சென்றால் 100 நாட்களில் முடிய வேண்டிய பிக்பாஸ் 50 நாட்களில் முடிந்துவிடும் என்பதால் தான் என்னவோ இந்த முடிவை எடுத்துள்ளது போலும். பிந்து மாதவி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் முன்பே தனக்கு போட்டி ஓவியாதான் என்று கூறியுள்ளார். இதனால் வரும் நாட்களில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது.

ஓவியா ஆர்மி உருவானது போல் பிந்து மாதவி ஆர்மி உருவாகுமோ என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.