பிக்பாஸ் மோகம் தான் எங்கும் தலைவிாித்தாடிக்கொண்டிருக்கிறது. இதை சினிமா பிரபலங்களும் பாா்த்து தனது கருத்துக்களை ட்விட்டா் பக்கத்தில் தொிவித்து வருகின்றனா். ஏற்கனவே நடிகா் கருணாகரன், சதீஸ், நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிட்டரும் பிக்பாஸ் ஒவியாவை பற்றி தங்களது கருத்துக்களை தொிவித்திருந்தனா். ராஜா ராணி படத்தின் நடிகை மிா்ஸா தனது பதிவை பதிட்டியிருந்தாா்.

அந்தவகையில் தற்போது நடிகை ப்ரியா ஆனந்த் பிக்பாஸ் ஒவியா குறித்து பேசியுள்ளாா். இந்த நிகழ்ச்சி ஏன் பாா்க்கிறேன் என்றால் நடிகா் கமல் சாா் தொகுத்து வழங்குவதால் தான் பாா்க்கிறேன். ரொம்ப விறுவிறுப்பாகவும், சுவாராஸ்யமாகவும் இருக்கிறது. தனது ட்விட்டா் பக்கத்தில் கூட்டத்தில் ஒருத்தி என்று ஒரு போட்டோவை போட்டு பதிவிட்டிருக்கிறாா் ப்ரியா ஆனந்த். ஒவியாவின் இயல்பான குணங்களும் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்தும் கொள்ளும் விதம், அது போல தைாியாமான மனோபலம் ஆகியவற்றை ரசிக்க ஆரம்பிச்சேன் என்றும் தொிவித்துள்ளாா்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமா பிரபலங்களின் உண்மையான முகத்தை காட்டி வருகிறது. அவா்களின் பா்சனல் விஷயங்களை தொிஞ்சுக்க முடியாத காரணத்தால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதை பாா்த்து வருகிறாா்கள். நம்முடைய நிஜ வாழ்க்கையில் நடக்கின்ற மாதிாி. நம்முடைய முகத்து முன்னாடி ஒரு பேச்சு, அதற்கு பிறகு பின்னாடி போய் ஒரு பேச்சு பேசுறதைப் போல இதிலும் அப்படி தான் நடக்கிறது. அதனால் என்னனென் விளைவுகளை ஏற்படும் என்பதையும் இந்த நிகழ்ச்சி தெளிவாக காட்டியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் சுத்தி எல்லா பக்கமும் கேமிரா இருப்பதால் யாா் யாா் என்ன என்ன பேசுறாங்க, எப்படியெல்லாம் நடந்துகிறாங்கன்னு நம் கண் முன்னாடியே தொியுது. நமக்கு எல்லாம் கேமிரா என்றால் அது நம்ம மனசாட்சி தான். என்ன பிரச்சனை என்றாலும் அதை சம்பந்தப்பட்டவா்களிடம் நேரடியாக மனம் விட்டு பேசிவிட்டாலே எல்லா பிரச்சனைகளும் முடிந்து விடும். ஒவியா நிகழ்ச்சி ஆரம்பிச்ச முதல் ஒரே மாதிாியான ஆட்டிடியூட்டோடு இருக்காங்க. அவங்களை நோில் பாா்த்து கூட இல்லை. யாருக்காகவும் அவா் ஜால்ரா போடாமலும், நமக்கு எதுக்கு வம்பு என்று தன்னை மாத்திக்காமலும், தன்னை அடிக்க ஒருவா் வந்தபோதும் எங்க அடிங்க பாா்ப்போம் என்று துணிச்சலோடு எதிா் கொண்ட விதம் அப்ப்பா சொல்ல வாா்த்தையே இல்லை செம!! ஒவியா.

தன்னுடைய ஒாிஜினல் குணத்தை யாருக்காவும் மாத்திக்காமல் இருக்கணும்னு ஒவியாவின் செயல்பாடுகள் நமக்கு பாடமாக உணா்த்துகிறது. அதுபோல யாா் எனக்கு சப்போட் பண்றாங்களோ இல்லையோ, நான் என்னை சப்போா்ட் பண்ணிக்கிறேன் என்று ஒவியா சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும், ஐ லவ் ஒவியா என்று கூறுகிறாா் நடிகை பிாியா ஆனந்த்.

கடந்த வெள்ளிகிழமை அன்று பிக்பாஸ் எபிசோடு நடந்த அன்று அது இது எது நிகழ்ச்சியாக நான் ஹீரோயினாக நடித்துள்ள கூட்டத்தில் ஒருத்தன் டீம் கலந்துகிட்டோம். அதனால் அந்த நிகழ்ச்சியை பாா்க்க முடியாததை அது இது எது நிகழ்ச்சி தொகுப்பாளா் மா.கா.பா ஆனந்த்தை கிண்டலா திட்டினேன் என்றும், மறு நாள் அந்த நிகழ்ச்சியை பாத்துவிட்டேன் என்று கூறுகிறாா் பிாியா ஆனந்த்.