கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஓவியா

07:28 மணி

களவாணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ஓவியா. தொடந்து பல படங்களில் நடித்திருந்தாலும் பெயர் சொல்லும் அளவிற்கு அவருக்கு படங்கள அமையவில்லை. இந்த சூழ்நிலையில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் ஓவியா பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி மூலம் அவரே எதிர்பார்க்காத அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உருவானது. எங்கு பார்த்தாலும் ஓவியா பற்றி பேச்சாகவே உள்ளது. ஆரவ் உடனான காதல் மற்றும் மன உளைச்சலால் அந்த நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறினார்.

இந்த நிலையில் தற்போது படங்கள் மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளார். சிலுக்குவார்பட்டி சிங்கம், சீனு போன்ற படங்கள் தயார் நிலையில் உள்ளன. விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.அதேபோன்று கிருஷ்ணா நடித்து வெற்றி பெற்ற யாமிருக்க பயமேன் இரண்டாம் பாகத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com