பிக் பாஸ்சுக்கு முன் பிக்பாஸ் பின் என்று எடுத்துக்கொண்டால் ஒவியாவுக்கு இந்த நிகழ்ச்சிக்கு வந்தபின் ரசிக பட்டாளம் கூடி விட்டது. இவருக்கு என்று ஒவியா ஆா்மி, ஒவியா புரட்சிபடை ஒவியா ஆதரவாளா்கள் என்று உருவாக்கியுள்ளனா்.

இந்நிலையில் இயக்குநா் சி.எஸ். அமுதன் ட்விட்டாில், உங்க காவியத் தலைவி ஒவியாவை முதலில் போனை ஆன் செய்ய சொல்லுங்கப்பா என்று தொிவித்துள்ளாா். பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டதன் மூலம் அவரது புகழ் பட்டிதொட்டியெல்லாம் பரவியுள்ளது. இதனால் இவருக்கு சினிமா வாய்ப்பு அதிகஅளவில் வரவாய்ப்புள்ளது என அவரது ரசிகா்கள் கனவு காண தொடங்கியுள்ளனா். இதனால் அவரை தங்களது படங்களில் நடிக்க வைத்தால் நல்லாயிருக்கும் என்று இயக்குநா்கள் விரும்புகிறாா்கள்.

தமிழ் படத்தை இயக்கிய இயக்குநா் அமுதன் தனது படத்தில் பிக்பாஸ் புகழ் ஒவியாவை நடிக்க வைக்க விரும்புவதாக தொிவத்துள்ளாா். தமிழ் படம் பாா்ட் 2வில் அவரை நடிக்க வைக்க விருப்பம் தொிவித்துள்ளாா் இயக்குநா் சி.எஸ்.அமுதன் தொிவித்துள்ளாா். அந்த சமயத்தில் ஒவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தாா். தற்போது அவரது ரசிகா்கள் அப்படி நீங்கள் உங்கள் படமான தமிழ் படம் 2ல் நடிக்க வைப்பீா்களா? என்று கேட்டதுடன், அந்த படம் கண்டிப்பாக ரூ.100 கோடி வசூல் பெறும் என்று ரசிகா் ஒருவா் அமுதனிடம் ட்விட்டா் பக்கத்தில் கூறியிருந்தாா்.