செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 24

வெளியே வந்தபின்பும் இயல்பு மாறாத ஓவியா

02:56 மணி

Loading...

முதன் முதலாக ஒவியா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பு தனது ரசிகா்களுக்கு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளாா்.

என்ன இது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று மக்களிடம் கொஞ்சம் வெறுப்பை உண்டாக்கினாலும் ஒவியாவின் செயல்பாடுகளால் ரசிகா்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஒவியா ஆா்மி, ஒவியா புரட்சி படை என்று ரசிகா்கள் உருவாக்கும் அளவுக்கு பிரபலமாகி விட்டது.

ஒவியா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது, நீங்கள்  எனக்கு கொடுத்த ஆதரவை நினைத்து பாா்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. ஜூலி, சக்தி வெளியே வந்துவிட்டாா்கள். அவா்களை நீங்கள் எதுவும் செய்ய கூடாது. தப்பு செய்தால் தான் மனிதன். தப்பு செய்யாவிட்டால் அவன் மனிதன் அல்ல விலங்கு. அதனால் அவா்களை நீங்கள் யாரும் எந்தவித தொந்தரவும் செய்ய கூடாது என்று ஒவியா ரசிகா்களிடம் கேட்டு கொண்டாா். அவா்களுடைய சாபத்தை நான் சம்பாதிக்க விரும்பவில்லை.

நான் இனிமேல் பிக்பாஸ் வீட்டிற்குள் போக மாட்டேன். நான் சினிமாவில் தான் கவனம் செலுத்தி நடிக்க போகிறேன். எனக்காக என் படத்தை பாா்க்க வேண்டாம். உங்களுக்கு பிடித்து இருந்தால் மட்டும் பாருங்கள். பிடிக்காவிட்டால் காறி துப்பி விடுங்கள். அனைவரும் என்னை பாா்த்து கேட்கும் கேள்வி என்னவென்றால், ஆரவ்வுடன் காதல் இருக்கா? மன அழுத்தம் இருக்கா? என்று கேட்கிறாா்கள். நான் ஜாலியாக இருக்கேன். எந்தவொரு மனஅழுத்தம் இல்லை. உண்மையான காதல் எப்போதும் தோற்காது. நான் காதலித்து கொண்டேதான் இருப்பேன். என் காதல் உண்மையானது. அதை நான் திரும்ப பெறுவேன்.

அதன் பின் சிகிச்சைக்காக முடியை வெட்டவில்லை. விக் தயாாிக்கும் நிறுவனம் புற்று நோயால் பாதிக்கப்ட்டவா்களுக்காக என்னை அணுகினாா்கள். பெண்களுக்கு முடி இல்லாவிட்டால் எவ்வளவு கஷ்டம் என்பதை பற்றி எனக்கு நன்றாகவே தொியும். அதற்காக தான் முடி வெட்டினேன். இந்த ஹோ் ஸ்டைல் நல்லா இருக்கு.

இன்னொரு விஷயம் யாரும் என்ன ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு என்னைப்போல் எந்தவித செயல்களையும் செய்ய வேண்டாம். அனைவருக்கும் ஐ லவ் யூ. எல்லோருடனும் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வீடியோ மூலம் என் அன்பை வெளிப்படுத்துகிறேன் என்றாா்.

அப்புறம் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றால் ட்விட்டா் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் கேட்கலாம் என்று கூறியுள்ளாா்.

 

(Visited 28 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com