ஓவியாவை அறைய விரும்பிய ரைசா: சிண்டு முடித்த ஜூலி

பிக்பாஸ் தற்போது தமிழக மக்களின் டிரண்டிங் வார்த்தையாக உள்ளது. காரணம் அந்த நிகழ்ச்சி அனைவரையும் கட்டு வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் நல்லவர்கல் என்று எண்ணிய பலரது உண்மை முகங்கள் தற்போது தெரியவந்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைவரும் விரும்பும் பெண்ணாக இருந்த ஜூலி தற்போது பிக்பாஸ் வில்லியாகவே சித்தரிக்கப்பட்டுவிட்டார். காரணம் அவர் ஓவியாவிடம் நடந்துகொண்ட விதம்.

தற்போது ஜூலி ரைசாவிடம் நெருங்கி பழகிவருகிறார். ரைசாவும் ஜூலிக்கு முழு ஆதரவை தருகிறார்.

இந்த நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சின்ன பிக் பஸ்ஸாக  நீங்கள் இருந்தால் உங்களுடைய வேலையாளாக யாரை தேர்தெடுத்திருப்பீர்கள் என ஜூலி ரைசாவிடம் கேட்டார். அதற்கு ரைசா ஜூலி என்று கூறினார். காரணம் அனைத்து வேலைகளையும் மிகவும் பொறுப்பாக ஜூலி செய்வர் என தெரிவித்தார்.

அடுத்த கேள்வியாக யார் இங்கு மிகவும் சோம்பேறி என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரைசா, ஓவியா என்று கூறினார். மேலும் பல கேள்விகள் கேட்ட ஜூலி சிண்டு முடிக்கும் வேலையாக ரைசாவிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். ஒரு கேள்வியை மிகவும் பர்சனலாக உங்களிடம் கேட்கிறேன் என கூறிய ஜூலி, இந்த வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களை நிற்கவைத்து பலமாக கன்னத்தில் அறையச்சொன்னால் யாரை அடிப்பீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த ரைசா ஜூலி எதிர்பார்த்ததுபோல ஓவியாவின் பெயரை கூறினார்.

இப்போ சந்தோசமா ஜூலி!!!