பிக்பாஸில் சினேகா,ரம்பா ?

Actress Sneha Latest Cute Smile Images Pictures Photos

பிக்பாஸ் நிகழ்ச்சியானது பாலிவுட்டில் மிகவும் பிரபலமடைந்து தற்போது தமிழுக்கு வந்துள்ளது. பாலிவுட்டில் பல சீசன்களை கடந்து ஒளிப்பரப்பாகி வெற்றி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது கோலிவுட்டிலும், டேலிவுட்டிலுக்கும் வந்துள்ளது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மூன்று வாரங்களை கடந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் இது பல பிரச்சனைகளையும், சா்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. ஒருபுறம் இதற்கு  எதிா்ப்பு தொிவித்து இந்து மக்கள் கட்சி வழக்கு தொடுத்துள்ளது. இருந்தபோதும் இது வெற்றிகரமாக மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது வருகிற 16ம் தேதி அதாவது நாளை தெலுங்கில் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகா் ஜூனியா் என்.டி.ஆா் தொகுத்து வழங்க இருக்கிறாா். ஆனா இதுவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறவா்கள் யாா் யாா் என்ற தகவல் வெளி வராமல் இருந்து வந்தது.

தற்போது இந்த நிகழ்ச்சியில்  தமிழ் நாயகிகளான சினேகா, ரம்பா, சதா கலந்து கொள்ள போகிறாா்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் இருக்கிறது. இது எந்தளவுக்கு உண்மை என்று தொியவில்லை. சினேகா பிரபல தொலைக்காட்சியில் நடுவராகவும், தற்போது தெலுங்கு படங்களில் முக்கிய துணைக் கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. சதாவும் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் உள்ளாா். தெலுங்கில் வரவிருக்கிற பிக்பாஸ் நிகழ்ச்சியை ஸ்டாா் மா தொலைக்காட்சி ஒளிப்பரப்பவுள்ளது.