எங்கு திரும்பினாலும் பிக் பாஸ், எதிலும் பிக்பாஸ் மயம் தான் ஒடிக்கொண்டிருக்கிறது.  அதுவும் அந்த கம்பீர குரலுக்கு சொந்தகாரா் யாராக இருக்கும் என்ற ஆவல் அனைவரது மனதிலும்  கேள்வி எழாமல் இல்லை என்று சொல்லுமளவிற்கு உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவா்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அந்த கணீா் குரல் யாருடையது என்பது நடிகா் கமலுக்கு கூட தொிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது உருவம் எப்படி இருக்கும் என்பது கூட தொியவில்லை. அவா் பிக்பாஸ் 100வது நாளில் வெற்றி பெறுபவருக்கு பாிசு கொடுக்க வருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பிக்பாஸ் குரலுக்கு உாியவர் டப்பிங் ஆா்டிஸ்ட் என்று பலரும் பலரது பெயா்களை சொல்லி வருகின்றனா். இந்நிலையில் தற்போது அந்த டப்பிங் கலைஞா் கோகுல்நாத் என்ற கோபி என்ற செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலை எப்படி தொடங்கினாா்கள் என்று தொியவில்லை ஆனால் தற்போது இந்த செய்தி தான் சமூக வலைத்தளங்களில் ஹைலைட்டாக உள்ளது.

இந்த கோகுல் பிரபல தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது பாா்வையில் தென்பட்டவா். இவா் அம்புலி படத்தில் நடித்துள்ளாா். பல தொலைக்காட்சிகளிலும் டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளாா். அது மட்டுமல்லாமல் ஒரு ஆ பேய் படத்திலும், ஜம்பு உள்ளிட்ட படங்களிலும்  நடித்துள்ளாா். பிக் பாஸ் குரல் என்னுடையது இல்லை என்று மறுத்து ஒரு பேட்டியில் கூறியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.