சாப்பாடு கிடைக்காமபோன கூட பரவாயில்ல… கடுப்பான மும்தாஜ்

mumtaz

தற்போது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. டாஸ்க் என்ற பெயரில் பிக்பாஸ் கொடுப்பது சண்டையை தான் ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. இதை தானே எதிர்பார்த்து காத்திருந்தார் பிக்பாஸ். சுவாரஸ்யத்தை கூட்ட பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஏற்ப போட்டிகள் கொடுக்கப்படுகின்றன. இந்த பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியினை பார்த்துவிட்டு வந்தவர்கள் என்பதால் இப்போதைய போட்டியாளர்கள் நடிப்பதாக புகார் எழுந்தது. இதனால் அவர்களது சுயத்தை வெளிக்கொண்டுவர போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனால் தற்போது பிக்பாஸ் சுவராஸ்யமாக மாறிவருகிறது. நேற்று நடந்த போட்டியில் தெரிந்திருக்கும் ஒவ்வொருவரின் மனநிலை எப்படி இருக்கிறது என்று. இன்று ஒரு புதிய புரொமோ வந்துள்ளது,

அதில் பொன்னம்பலம் யாரை பற்றியோ பின்னால் பேச, மும்தாஜ் நான் சாப்பாடு இல்லாமல் இருப்பேன், ஆனால் பொய் சொல்ல மாட்டேன் என்று யாஷிகாவிடம் கூறுகிறார்.வீட்டில் யார் பொய் கூறினார்கள், பொன்னம்பலம் மும்தாஜை தான் பின்னால் பேசுகிறாரா என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.