பிக்பாஸ் ஜூலியை மாறி மாறி கட்டிப்பிடித்த நடிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைநட்சத்திரங்கள் பலர் பீல்ட் அவுட் ஆனவர்கள் என்பதால் நிகழ்ச்சி சுவாரஸ்யம் இன்றி சென்று கொண்டிருந்தது. இதில் ஒரே ஆறுதல் ஜல்லிக்கட்டு போராளி ஜூலியின் எண்ட்ரிதான்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாள் என்னை கட்டிப்பிடித்து வரவேற்க யாருமே இல்லை என்று ஆதங்கப்பட்ட ஜூலியை நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அதில் கலந்து கொண்ட நடிகர்கள் உள்பட அனைத்து பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் அனைவரும் கட்டிப்பிடித்தனர்

இன்று ஜூலிக்கு பிறந்த நாள் என்பதால் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு ஜூலியை எழுப்பி அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து கூறியதோடு அவரை கட்டிப்பிடித்து தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர். இதனால் சிறிது நேரம் ஜூலி மிகவும் உணர்ச்சியுடன் ஆனந்தக்கண்ணீருடன் காணப்பட்டார்.