நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமாருக்கும் பிக்பாஸ் புகழ் நடிகை சுஜா வருணிக்கும் சென்னையில் இன்று திருமணம் நடைப்பெற்றது.

 

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி.இவர் தமிழில் சேட்டை,இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும்,நடிகர் ராம்குமாரின் மகனுமான சிவக்குமாரை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.மேலும், திருப்பதிக்கு சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியானபோது தான் இவர்கள் காதல் விவகாரம் பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது.

இதையும் படிங்க பாஸ்-  பேத்தியை திருமணம் செய்து கொண்ட தாத்தா ! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இதையடுத்து சென்னையில் உள்ள கிரவுன் பிளாசாவில் இவர்களின் நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது.மேலும் அவர்களின் திருமணம் இன்று காலை நடந்தது முடிந்தது.

இத்திருமண விழாவில்  நடிகர் சிவக்குமார், நடிகைகள் ராதிகா சரத்குமார், ஸ்ரீ ப்ரியா, சுஹாசினி மணிரத்னம், விஜி சந்திரசேகர், கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இதையும் படிங்க பாஸ்-  நயன்தாராவை முந்திய ஓவியா