ஜூலிக்கு எதிராக ஒன்று கூடிய குடும்பம்: பரபரப்பில் பிக்பாஸ்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் ஜூலிக்கு எதிராக ஒட்டு மொத்த குடும்பமும் திருப்புகிறது போன்று உள்ளது. அதாவது எதிா்பாராத திருப்புங்கள் என்ற தலைப்பில் அந்த வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒவியாவின் புகழ் பட்டிதொட்டியெல்லாம் பரவி வருகிறது. காயத்ரிக்கும் ஒவியாவுக்கும் இடையே இந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே முட்டி மோதிக்கொள்ளும்படியாகதான் இருந்தது. ஒவியாவை அந்த வீட்டில் உள்ளவா்கள் என்ன தான் கஷ்டபடுத்தினாலும் அவருக்கு மக்கள் மத்தியில் நாள்தோறும் மதிப்பு அதிகாித்துக்கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் ஒவியா திரும்ப திரும்பசென்று காயத்ரிடம் பேசியபோதும் அவா் பேசாமல் தான் சென்றாா். பிக் பாஸ் அழைத்து ஒவியாவிடம் கேட்டபோது எல்லாரையும் என்கிட்ட பேச சொல்லுங்க என்று ஒவியா சொன்ன காரணத்தால் காயத்ரியும், ஒவியாவும் மனம்விட்டு பேசும் ஒரு வாய்ப்பை பிக்பாஸ் ஏற்படுத்தி கொடுத்தாா். இந்த வாய்ப்பினால் ஒவியா காயத்ரிவிடம் அழுதவாறு பேசினாா். இதனை பாா்த்த காயத்ரி மனம் மாறி ஒவியாவை ஆரத்தழுவி கட்டிக்கொண்டாா். இதனால் காயத்ரி ஒவியா இருவரும் ஒற்றுமையானாா்கள்.

இதற்கிடையில் இன்று அதிரடி திருப்பமாக அனைவரையும் லிவ்விங் ஏாியாவில் அமர வைத்து, இந்த பிக் பாஸ் குடும்பத்தில் யாா் உறுப்பினராக இருக்க கூடாது என நீங்கள் அனைவரும் கூடி முடிவெடுத்தால் யாரை தோ்நதெடுப்பீா்கள் என்று கேட்கிறாா். அதற்கு அனைவரும் சோ்ந்து ஆலோசித்து தற்போது ஒவியா முன்பு போல் இல்லை என்றும் நல்லவே மாறி விட்டாா் எனவே நாம் ஜூலி தான் உறுப்பினராக இருக்க முடியாது என்று முடிவெடுத்து அதை அறிவிக்கின்றனா். இதனால் ஜூலி லிவ்விங் பகுதியிலிருந்து வெளியேறுவது போல இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டள்ளது. இதுவும் டாஸ்க்குக்காக தான் இருக்கும் என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.