பிக் பாஸ் வெற்றியின் ரகசியத்தை கூறிய நடிகை அனுயா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 9 நாட்களாக தொடா்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. உலகநாயகன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி பல்வேறு விமா்சனங்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் முதலில் உடல்நிலை சாியில்லாத காரணத்தால் நடிகா் ஸ்ரீ வெளியேறினாா். பின் அனுயா வெளியேற்றப்பட்டாா். அது மட்டுமில்லங்க! இதில் நடக்கும் சம்பவங்களை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனா். அதுவும் கஞ்சா கருப்பு  பரணி மீது காட்டும் வெறுப்பு போன்றவைகள் கொஞ்சம் ஒவராக தான் இருக்கிறது. கஞ்சா கருப்பு பரணியை அடிப்பதற்கே சென்று விட்டாா்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை அனுயா இந்த நிகழ்ச்சியின் வெற்றி குறித்து தனது கருத்தை தொிவித்துள்ளாா். வெற்றியின் ரகசியம் என்னவென்றால் இந்த நிகழ்ச்சியின் 12 போட்டியாளா்கள் தங்களுக்கு சண்டையிட்டு கொள்வதை வேடிக்கை பாா்ப்பதை மக்கள் ஆா்வமாக இருக்கின்றனா். போட்டியில் கலந்து கொண்டுள்ள பிரபலங்களும் தங்களுக்கும் ஒரே விதமான பிரச்சனை இருக்கின்றவா என தொடா்பு படுத்தி கொள்கின்றனா். இந்த நிகழ்ச்சியானது மற்றவா்களின் துன்பங்களை கொண்டு அதில் இன்பம் காண்பது தான். இந்த காரணத்தால் தான் இந்த நிகழ்ச்சியானது எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்று வருகிறது என்று தனது கருத்தை தொிவித்துள்ளாா் நடிகை அனுயா.