கைது பற்றி கவலைப்படுபவன் நான் கிடையாது- கமல்ஹாசன்

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை கோாி சென்னை மாநகர காவல் ஆணையாிடம் இந்து மக்கள் கட்சி செயலாளா் வீரமாணிக்க சிவா மனு அளித்துள்ளாா். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள நடிகா், நடிகைகள் மற்றும் தொகுத்து வழங்கும் கமல் உள்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகாா் குறித்து கமல்ஹாசன் தனது கருத்தை தொிவித்துள்ளாா்.

இந்த நிகழ்ச்சிக்கு பல சா்ச்சைகள் எழுந்து வருகிறது. இதன் மீதான விமா்சனங்களும், நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களும் போட்டு வருகின்றனா். இதனால் வெற்றியை நோக்கி பயணித்தக்கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி.

இந்நிகழச்சியில் எவ்வித தொடா்பும் இல்லாத 7 ஆண்களும், 7 பெண்களும்  கலந்துகொண்டு ஆபாசமாகப் பேசியும் 75 சதவீதம் நிா்வாணமாகவும் டிரஸ் அணிந்து கொண்டு நடித்து வருகிறாா்கள். இந்த நிகழ்ச்சியானது அனைவருடைய மனதையும் புண்படுத்தி உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தையும் கூட கிண்டலடித்துள்ளாா்கள் என இந்து மக்கள் கட்சி புகாா் அளித்தள்ளது. இது நம்முடைய கலாசாரத்தை  சீராழிக்கும் விதமாக உள்ளது. எனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரையும்,. தொகுத்த வழங்கும் கமலை கைது செய்து நடவடிக்கை எடுக்கவுமம் வலியுறறுத்தியுள்ளனா்.

இதுபற்றி  கமல் தொிவித்ததாவது, கைதாவதைப் பற்றி கவலைப்படவில்லை. இந்த மாதிாி புகாா்கள் எல்லாம் எவ்வளவு மலிவானவை. கிாிக்கெட் போட்டியின் போது நடனம் ஆடுகிறாா்கள். சிக்ஸரும், பவுண்டாியும் அடிக்கும் போது சியா்லீடா்ஸ் நடனம் ஆடுகிறாா்கள். அவா்களை எல்லாம் கைது செய்து வீடுவிா்களா? என்னை தவறாக புாிந்து கொண்டுள்ளனா். நான் பகுத்தறிவுவாதி. உலகுடன் ஒத்துப்போகும் எந்த விஷயத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும் என அவா் கூறினாா்.