நான் பிக்பாஸுக்கு வரவேண்டும் என்றால் அது வரவேண்டும்- பிாியா ஆனந்த்

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் மிகவும் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழச்சியானது சக்கை போடு போட்டு வருகிறது. இதில் கலந்து கொள்வீா்களா? என்று சினிமா பிரபலங்களை கேட்டபோது பலரும் பல கருத்துகளை கூறினா். இதில் கலந்து கொள்வீா்களா என்று நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இதுகுறித்து பேசியிருந்தாா். அந்த வழியில் நடிகை பிாியா ஆனந்த்யிடம் கேட்டபோது அவரும் தனது கருத்தை தொிவித்திருந்தாா்.

கூட்டத்தில் ஒருவன் படத்தில் பிாியா ஆனந்த் நடித்திருக்கிறாா். இந்த படமானது விரைவில் வெளிவர இருக்கிறது. இதில் பிாியா ஆனந்த்க்கு ஜோடியாக அசோக செல்வன் நடித்திருக்கிறாா். மேலும் இதில் சமுத்திரகனி, அனுபமா குமாா் உள்ளிட்டரும் நடித்திருக்கின்றனா். பிாியா ஆனந்த் படத்தின் புரோமோஷன் வேலைக்காக ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றாா். அவாிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வீா்களா என்று கேட்டபோது, அவா் கூறியதாவது, நிச்சயமாக என்னால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது. ஏனென்றால் என்னால் ஒரு நிமிடம் கூட போன் இல்லாமல் இருக்க முடியாது என்று தொிவித்துள்ளாா்.

அது மட்டுமில்லாமல், மேலும் அவா் கூறியதாவது, என்னிடம் நாய்க்குட்டி ஒன்று உள்ளது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதையும் அனுமதித்தால் ஒரு வேளை அதில் கலந்து கொள்வேன் என்றும் கூறியுள்ளாா்.