பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்தாண்டை போல இந்த சீசனும் நல்ல சுடு பிடிக்க போகிறது. கடந்தாண்டு எங்கும் பிக்பாஸ் மோகம் தான் மக்கள் மத்தியில் தலைவிரித்தாடியது. தற்போதும் அதே நிலை தான் நீடிக்கிறது. எப்போது வரும் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் இவராக இருக்குமோ, அவரா இருக்குமோ என்று பலதரப்பட்ட தகவல்கள் வந்த நிலையில் தற்போது ஒவ்வொரு நபரின் பெயர் பட்டியல் வெளியாகி கொண்டு இருக்கிறது.

அதுபோல பிக்பாஸ் வீட்டில் அடியெடுத்து வைக்க போகும் நபர்களாக ஒவ்வொரு நாளும் ஒரு பட்டியல் வந்து கொண்டு இருந்தது. பவல் ஸ்டார் சீனிவாசன், தாடி பாலாஜி என ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் மாற்றம் செய்து இருக்கிறார்கள். பிக்பாஸ் முதல் சீசனில் பூந்தமல்லி பக்கத்தில் ஃபிலம் சிட்டியில் பிரம்மாண்டமாக போடப்பட்டிருந்த அதே செட்டில் தான் இந்த சீசனும் நடைபெறுகிறது. எல்லாவிதமான வசதிகளும் அந்த வீட்டில் இருக்கும்.

15 பிரபலங்கள், 60 கேமராக்கள் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று கமல் சொல்லும் புரோமோவில் உள்ளது. பிக் பாஸ் வீட்டில் ஒருசில மாற்றங்கள் செய்து உள்ளனர். பிக் பாஸ் தனியாக அழைத்து பேசும் கன்ஃபஷன் ரூம். அந்த ரூம்மில் சில மாற்றங்களை செய்து உள்ளனர். கதவு மற்றும் அமரும் சேர் டிசைனை மொத்தமாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால் முக்கியமான செய்தி என்னவென்றால் கடந்த பிக்பாஸ் இல்லாத ஒரு விஷயம் இந்த சீசனில் உள்ளது. ஒரு பயங்கரமான செட் ஒன்றை வைத்துள்ளார்கள். சிறை போன்ற ஒரு சிறிய அறையை செட்டில் அமைத்துள்ளார்கள். அந்த சிறைக்குள் அவ்வளவாக எந்தவித வசதியும் இருக்காது. ஒரு இரும்புக்கட்டில், சின்ன லைட் மட்டும் தான் இருக்கும். பிக்பாஸ் வீட்டில் தவறு செய்பவர்களுக்கும், எந்தவித வேலையும் செய்யாமல் இருப்பவர்களும் தண்டனை கடுமையாக இருக்கும் என்பதை இந்த சிறை மூலம் தெரிய வருகிறது.