கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நேற்று
முடிவடைந்தது. இதில் இறுதியில் ரித்விகா வெற்றி பெற்றார்.
அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அனைவரும் எதிர்பாரா வகையில் ஜனனி முதல்
மூன்று இடத்தில் கூட இல்லாமல் வெளியேறியது
அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சீசனில் ஆரம்பம் முதல் இறுதி வரை சிறப்பாக
செயல்பட்ட ஜனனி முதல் மூன்று இடத்தில் இல்லாமல்
போனது பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது.

இந்நிலையில், ஜனனி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே
வந்த பிறகு, முதல் முறையாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், வணக்கம் நீண்ட நாள் கழித்து வீடு திரும்பதியதில்
மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி சொன்னால்
போதுமானதாக இருக்காது. நன்றி நன்றி நன்றி என
கூறியுள்ளார்.

https://twitter.com/jan_iyer/status/1046677798109175809