ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் இன்று விஜய் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிறார்.

பிக்பாஸ் 2ல் யார் யாரெல்லாம் கலந்துகொள்ளபோகிறார்கள் என்று அனைவரும் காத்திருக்கின்றனர். பாலாஜி,அவரது மனைவி,மும்தாஜ், பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோரது பெயர்கள் மட்டும் உறுதியாக கூறப்பட்டது.

இந்த நிலையில் பிக்பாஸ் 2விலிருந்து பவர் ஸ்டார் சீனிவாசன் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. காரணம் சம்பள பிரச்சனை என்றும் தெரிகிறது. அதாவது பிக்பாஸ் டீமில் பிரபலங்களை பொறுத்தே அவர்களது சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் அவருக்கு திருப்தி இல்லாததால் அவர் விலகியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் விபரம் தெரியவந்துள்ளது.

1. யாஷிகா ஆனந்த்

2. பொன்னம்பலம்

3.நித்யா

4. தாடி பாலாஜி

5. மும்தாஜ்

6. மமதி சாரி

7. ஜனனி ஐயர்

8. வைஷ்ணவி

9. சென்ட்ராயன்
10. மகத்
11. ஐஸ்வர்யா தத்தா
12. டேனியல் ஆனி போப்
13. ரித்விகா
14. ரம்யா
15. ஷாரிக் கான்

16. ஆனந்த் வைத்தியநாதன்

இவர்கள் தவிர ஓவியா,ஆரவும் பங்கேற்க உள்ளனர்.