நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து யாஷிகா வெளியேற்றப்பட்டார். யாரும் எதிர்பார்க்காததை தான் எப்போதும் செய்து பிக்பாஸின் வழக்கம். அதுபோல தான் இந்த வாரம் ஐஸ்வர்யா தான் வெளியே செல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக்பாஸோ யாஷிகாவை வெளியேற்றி விட்டார். அதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. ஏனெனில் டாஸ்க் அனைத்தும் நன்றாக செய்த யாஷிகாவை ஏன் வெளியேற்றி ஐஸ்வர்யாவை காப்பாற்றி வருகிறார்கள் என்ற கேள்விக்கு தான் விடை கிடைக்கவில்லை.

வெளியேற போகிறது யாஷிகாவிற்கு தெரிந்து இருக்கிறது. அதனால் தான் என்னவோ அவர் பிக்பாஸுக்கு நன்றி தெரிவித்து கண்ணாடியில் எழுதி உள்ளார். எப்படி என்றாலும் பிக்பாஸ் ஐஸ்வர்யாவை காப்பாற்றி விடுவார் என்பது நமக்கு தெரிந்தது யாஷிகாவிற்கும் தெரிந்து விட்டதோ என்வோ அதனால் அபபடி எழுதி இருக்கிறார். அதுபோல கமல் ஒட்டு கேட்டு பிரச்சாரம் செய்ய சொன்ன போது நான் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்டு இந்த வீட்டை விட்டு போய்விட்டால் என்ன செய்வது என்று வெகுளிதனமாக கேட்ட யாஷிகாவை பார்ப்பதற்கே பாவமாக இருந்தது.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் முதலில் தனது கருத்துக்களை தெரிவித்து வந்த ஸ்ரீப்ரியா தற்போது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிள்ளார். கடந்த சீசனை பற்றி காமெடி நடிகர் சதீஸ் மற்றும் நடிகை மற்றும் கமல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினருமான ஸ்ரீப்ரியா சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்தினை பதிவு செய்து வழக்கமாக வைத்திருந்தனர். தற்போது யாஷிகா வெளியேற்றப்பட்டது குறித்து ஸ்ரீப்ரியா கோபமாக இருக்கும் பதிவினை பதிவிட்டிக்கிறார்.

சத்ய பிரகாஷ் சூப்பர் சிங்கர் பட்டத்தை வெல்லாதபோது, அதுபோல இந்த சூப்பர் சிங்கர் சீசனில் ஸ்ரீகாந்த் வெற்றி பெறாதபோது என்று விஜய் டிவி என்னை பலமுறை அதிருப்தி அடைய வைத்துள்ளது. அதே மாதிரி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து யாஷிகா வெளியேற்றப்பட்டதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என ட்வீட்டி கோபமாக இருக்கும் ஸ்மைலியை போட்டுள்ளார் நடிகை ஸ்ரீப்ரியா. மேலும் யாஷிகா வாழ்த்து தெரிவித்தும் கருத்து பதிவிட்டிருக்கிறார்.