கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகா்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் அதற்கு பிறகு பிக்பாஸ் சூடு பிடிக்க தொடங்கியது. இதனால் இதன் இரண்டாம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பிக்பாஸ் சீசன் 2 ஜுன் மாதம் தொடங்க உள்ள நிலையில் அதை தொகுத்து வழங்குவது கமல். பிக்பாஸ் சீசன் 2வின் டீசர் இன்று மாலை வெளியாகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது பல்வேறு விமா்சனங்களையும் சர்ச்சைகளும் கடந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ரியாலிட்டி ஷோவில் 15 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் தங்கி இருக்க வேண்டும். வெளியுலக தொடர்பின்றி 100 நாட்கள் அந்த வீட்டில் வாழ வேண்டும். பின் மக்களால் அதிக வாக்குள் பெற்றவர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கமல் அரசியல் குறித்தான கருத்துக்களை கூறினார். இதன் மக்களிடத்தில் எளிதாக போய் சேரும் என்ற கண்ணோட்டத்தில் அரசியல் பற்றி அவ்வப்போது பேசினார். அதன் பின் கமல் அரசியல் களம் இறங்கி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளார். கட்சி ஆரம்பித்து அதில் பயணித்துக் கொண்டிருக்கும் கமலால் இதன் இரண்டாம் பாகத்தை தொகுத்து வழங்கமுடியாது என்பதால் அரவிந்த்சாமி, சூர்யா தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கமல் தொகுத்து வழங்கினால் மட்டுமே இந்த நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என்பதால் மீண்டும் கமலே தொகுத்து வழங்க உள்ளார்.

தற்போது இரண்டாவது சீசன் பிக்பாஸ் டீசர் இன்று மாலை 5மணியளவில் வெளியாகவுள்ளது. முதல் சீசன் போலவே இந்த இரண்டாவது சீசனும் அதிக எதிர்பார்ப்போடும், பிரம்மாண்டமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.