எச்சைகளோட எனக்கென்ன சாவகாசம். பிக்பாஸ் காயத்ரி ஆவேசம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சமின்றி விறுவிறுப்பான காட்சிகள் தற்போது நடைபெற தொடங்கிவிட்டது. குறிப்பாக ஜல்லிக்கட்டு போராளி ஜூலியை கட்டம் கட்டி ஆர்த்தியும், காயத்ரி ரகுராமும் பின்னி பிடலெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் 30 வினாடி டீசரை தற்போது விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. அதில் ‘இதுக்குத்தான் இந்த எச்சைகளோட நான் சேர மாட்டேன்னு சொன்னேன். முதலிலேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதுன்னு சொன்னேன். இவங்க எல்லாம் எனக்கு தேவையே இல்லை’ என்று ஆவேசமாக பேசுகிறார். அவருக்கு கணேஷ் வெங்கட்ராமன் உள்பட ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இன்னொரு பக்கம் வையாபுரி கதறி கதறி அழுகின்றார். அவரை ஜல்லிக்கட்டு போராளி ஜூலி தேற்றுகிறார். இந்த டீசரால் இன்றைய நிகழ்ச்சி படுசுவாரஸ்யமாக போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.